டிக் டிக் யாரது....
உற்சாகம் தரும் இவ்விளையாட்டை, நான்கிலிருந்து எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
ஏதேனும் சுவர் ஓரத்தில், ஒரு சிறுவன் நின்று கொள்ள வேண்டும். மற்ற சிறுவர்கள் அவனுடைய கைக்கு எட்டாத தூரத்தில் தள்ளி நின்று கொள்வார்கள். இப்போது, பின்வரும் கேள்வி பதிலை, மாறி மாறி இருதரப்பும் சொல்ல வேண்டும்.
சிறுவன் : டிக், டிக் (கதவை தட்டுவது போல் பாவனை செய்ய வேண்டும்)
சிறுவர்கள் : யாரது?
சிறுவன் : திருடன்
சிறுவர்கள் : என்ன வேண்டும்
சிறுவன் : நகை வேண்டும்
சிறுவர்கள் : என்ன நகை?
சிறுவன் : கலர் நகை
சிறுவர்கள் : என்ன கலர்?
சிறுவன் : ஏதாவது ஒரு நிறத்தைச் சொல்ல வேண்டும்
இப்படி ஒரு நிறத்தைச் சொன்னதும், சிறுவர்கள் தாமதிக்காமல் ஓடிப்போய், அந்த நிறம் எதிலிருக்கிறதோ அதைத் தொட வேண்டும். உதாரணத்திற்கு, பச்சை என்று அந்தச் சிறுவன் சொன்னால், மரம், செடி, ஆடை என்று எங்கு பச்சை நிறம் இருக்கிறதோ, அதை தேடிப்போய் தொட வேண்டும். பச்சை நிறம் எங்கிருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கும் போதே, சிறுவர்களில் யாரேனும் ஒருவரை அந்த சிறுவன் தொட்டாலும் அவர் அவுட். தேடிக் கண்டுபிடிக்க கடினமான நிறத்தை சொல்லி, அதன்மூலம் எதிராளியை தடுமாறச் செய்து, அவரை அவுட் ஆக்குவதுதான் விளையாட்டின் சாமர்த்தியம். மாறி மாறி விளையாடும்போது, இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
Comments
Post a Comment