‘குலை குலையாய் முந்திரிக்காய்’

தமிழகத்தில் விளையாடப்படும், ‘குலை குலையாய் முந்திரிக்காய்’ விளையாட்டு, பல்வேறு நாடுகளில் வேறு பெயர்களில் விளையாடப்படுகின்றன. மேலை நாடுகளில், இவ்விளையாட்டை, ‘டிராப் த ஹேண்ட்கர்ச்சீஃப்’ (Drop the Handkerchief) என்பார்கள்.
குறைந்தது ஐந்து முதல், எத்தனை பேர் வேண்டுமானாலும் இவ்விளையாட்டை விளையாடலாம். எட்டுப் பேருக்கு அதிகமாக இருந்தால், விளையாட்டு சுவாரஸ்யமாக இருக்கும். ஆட்டக்காரர்களில் ஒருவரைத் தவிர, மற்றவர்கள் வட்டமாகச் சுற்றி அமர்ந்துகொள்ள வேண்டும். பழம் தேர்வு முறை (எ.கா., சாட், பூட், த்ரீ)  மூலம் சுற்றப்போகும் நபரைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
இப்போது, பழமானவர் கையில், கைக்குட்டை அல்லது சிறு துணியை வைத்துக்கொண்டு, வட்டத்தைச் சுற்றி வர வேண்டும். சுற்றும்போது, பாட்டுப்பாடிக்கொண்டே சுற்ற வேண்டும்.

‘குலை குலையாய் முந்திரிக்காய்’ என்று சுற்றுபவர் முதலில் பாட்டைத் தொடங்க வேண்டும்.
 ‘நரியே நரியே சுத்திவா’ என்று கீழே அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் கைத்தட்டியபடி பாட வேண்டும்.
 ‘கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான்’ (சுற்றுபவர்)
கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி (அமர்ந்திருப்பவர்கள்)
இப்படியாக பாடிக்கொண்டிக்கும்போதே, யாருடைய பின்புறமாவது கைக்குட்டையை கீழே போட்டுவிட்டு, சுற்றுபவர் ஓட வேண்டும். யாருக்கு பின்புறம் போடப்பட்டதோ, அவர் கைக்குட்டையை எடுத்துக்கொண்டு, வட்டத்தைச் சுற்றி ஓடுபவரை துரத்த வேண்டும். இப்போது காலியான இடத்தில், ஓடுபவர் வந்து அமர்ந்துகொள்வதற்கு முன்னாலேயே துரத்துபவர் பிடித்துவிட்டால், அவர் அவுட். இல்லையென்றால், முன்னவரை போல, குலை குலையாய் முந்திரிக்காய் என்று பாடிக்கொண்டு, ஆட்டத்தை தொடர வேண்டும். இப்படியே, சுழற்சியாக விளையாடினால், சோர்வே தட்டாமல் விளையாடலாம். தனக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை, எப்போதும் விழிப்புடன் கவனிக்கும் பழக்கத்தை இவ்விளையாட்டு மூலம் கற்றுக்கொள்ளலாம்.
– மு.கோபி

Comments

Popular posts from this blog

காக்கா குஞ்சு

டிக் டிக் யாரது....