Posts

Showing posts from May, 2017

‘குலை குலையாய் முந்திரிக்காய்’

தமிழகத்தில் விளையாடப்படும், ‘குலை குலையாய் முந்திரிக்காய்’ விளையாட்டு, பல்வேறு நாடுகளில் வேறு பெயர்களில் விளையாடப்படுகின்றன. மேலை நாடுகளில், இவ்விளையாட்டை, ‘டிராப் த ஹேண்ட்கர்ச்சீஃப்’ (Drop the Handkerchief) என்பார்கள். குறைந்தது ஐந்து முதல், எத்தனை பேர் வேண்டுமானாலும் இவ்விளையாட்டை விளையாடலாம். எட்டுப் பேருக்கு அதிகமாக இருந்தால், விளையாட்டு சுவாரஸ்யமாக இருக்கும். ஆட்டக்காரர்களில் ஒருவரைத் தவிர, மற்றவர்கள் வட்டமாகச் சுற்றி அமர்ந்துகொள்ள வேண்டும். பழம் தேர்வு முறை (எ.கா., சாட், பூட், த்ரீ)  மூலம் சுற்றப்போகும் நபரைத் தேர்வு செய்து கொள்ளலாம். இப்போது, பழமானவர் கையில், கைக்குட்டை அல்லது சிறு துணியை வைத்துக்கொண்டு, வட்டத்தைச் சுற்றி வர வேண்டும். சுற்றும்போது, பாட்டுப்பாடிக்கொண்டே சுற்ற வேண்டும். ‘குலை குலையாய் முந்திரிக்காய்’ என்று சுற்றுபவர் முதலில் பாட்டைத் தொடங்க வேண்டும்.  ‘நரியே நரியே சுத்திவா’ என்று கீழே அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் கைத்தட்டியபடி பாட வேண்டும்.  ‘கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான்’ (சுற்றுபவர்) கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி (அமர்ந்திருப்பவர்கள்) இப்...

கியா கியா குருவி நான்....

பாவனையை அடிப்படையாக கொண்ட இவ்விளையாட்டு குழுவாக ஆடப்படுகிறது. குறைந்தது 5 பேர் தேவை. இதில் ஒருவர் குருவியாகவும், மற்றவர்கள் தென்னை மரம், வாழை மரம், வேப்ப மரம் மற்றும் ஆல மரம் போன்று என்று நடிக்க வேண்டும்.  முதலில் சந்தோஷமாக வாழ்ந்த குருவி ஒன்றுக்கு, துன்ப நேரமாக அதன் இறக்கை ஒடிந்துவிடுகிறது. இப்போது, இறக்கை ஒடிந்த குருவி, ஒவ்வொரு மரமாக சென்று தஞ்சம் கேட்க வேண்டும். முதலில் வேப்ப மரத்திடம் சென்று, கியா கியா குருவி நான் கியா கியா குருவி நான் முள்ளில் ஒரு குருவி வசித்து வந்தது அதன் இறக்கை ஒடிந்து விட்டது வேப்ப மரமே! வேப்ப மரமே... சிறகிழந்த பறவைக்கு இடம் தருவாயா? என்று பாட வேண்டும். அப்போது, வேப்ப மரம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி, மறுத்துவிட வேண்டும். பிறகு தென்னை மரத்திடம் போய், அதே பாட்டை பாட வேண்டும். ‘தென்னை மரமே, தென்னை மரமே, சிறகிழந்த பறவைக்கு இடம் தருவாயா?’ என்று கேட்கும்போது, தென்னை மரமும் சாக்குபோக்கு சொல்லி மறுத்துவிட வேண்டும். அடுத்து வாழை மரத்திடம் கேட்க வேண்டும். அதுவும் மறுத்துவிட்ட பின்னர், கடைசியாக ஆலமரத்திடம் செல்ல வேண்டும். ஆலமரமோ, குருவியிடம் ஆறுதலான வார்த்தைகள...

கொக்கு பறக்கும்; ஆட்டோ பறக்குமா?

விளையாடத் தேவையான நபர்களின் எண்ணிக்கை குறைந்தது நான்கிலிருந்து எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, விளையாட்டின் சுவாரஸ்யம் கூடும். விளையாடத் தேவையான இடம், பொருள் வீட்டுக்குள் உட்கார்ந்தும் விளையாடலாம்.  பொருள் எதுவும் தேவையில்லை. விளையாடும் முறை விளையாட்டுக் குழுவில் யாரேனும் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். தலைவர் உட்பட எல்லோரும் வட்டமாக உட்கார்ந்துகொள்ள வேண்டும். அனைவரும் உள்ளங்கைகளை தரையோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும். தலைவர் முதலில், காக்கா பற பற என்பார். உடனே மற்றவர்கள், பறவை பறப்பது போல்  கைவிரல்களை மேலும் கீழுமாக அசைக்க வேண்டும். இப்படியாக, கொக்கு பறபற, கோழி பறபற, மைனா பறபற என்று ஒவ்வொன்றாகச் சொல்லும்போது, குழுவில் உள்ள மற்றவர்களும் கைகளை பறப்பது போல் அசைக்க வேண்டும். திடீரென, தட்டு பறபற, ஆட்டோ பறபற, நாய் பறபற என்று ஏதேனும் பறக்காத பொருளைக் குறிப்பிட்டு, பறபற என்று தலைவர் சொல்வார். அப்படி பறக்காத பொருளைக் குறிப்பிட்டால், குழுவினர் யாரும் எந்த அசைவையும் மேற்கொள்ளக் கூடாது. கைகளை தரையோடு தரையாகத்தான்...