பச்சை குதிரை தாண்டலாம் வாங்க...


குனிந்து நிற்கப்போகிறவர், ஒரு பூவின் பெயரையோ, உணவுப் பொருளின் பெயரையோ (உதாரணத்திற்கு ரோஜா, தோசை) யாரிடமாவது சொல்லி வைத்துவிட வேண்டும். இது பிறருக்குத் தெரியாது. ஒரு பூவின் பெயர் சொல்லப்பட்டுள்ளது என்று மட்டும் பிறருக்கு துப்புக் கொடுத்துவிட வேண்டும்.

இப்போது, அவரை குனியவைத்து, மற்றவர்கள் அவரது முதுகில் கையை வைத்துத் தாண்ட வேண்டும். தாண்டுபவர், ஏதேனும் பூவின் பெயரைச் சொல்வார். அவர் சொல்வது, குனிந்தவர் ரகசியமாக சொன்ன பூவின் பெயராக இருந்தால், தாண்டியவர் அவுட் ஆகிவிடுவார். இப்போது அவர் குனிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், அடுத்தவர் தாண்டுவார். இப்படியே விளையாட்டை நீட்டிச் செல்ல வேண்டும்.

ஆரம்பத்தில், தாழ்வான நிலையில் குனிந்திருப்பதால், தாண்ட இலகுவாக இருக்கும். ஆனால், அடுத்தடுத்த ரவுண்டுகளில், குனிந்திருப்பவர் மெல்ல மெல்ல உயரத்தை கூட்டிக்கொண்டே வருவார். அதைச் சமாளித்து, சரியாகத் தாண்ட வேண்டும். இல்லாவிட்டால், அவர் அவுட்டாகி விடுவார்.

அதாவது, குனிந்திருப்பவர் முதல் ரவுண்டில், கால்-கட்டைவிரலைப் பிடித்துக்கொண்டு நிற்பார். அடுத்து, கணுக்காலைப் பிடித்துக்கொண்டு நிற்பதால், இன்னும் கொஞ்சம் உயரம் கூடும். அதற்கடுத்து, முழங்காலை பிடித்துக்கொண்டு நிற்பார். நான்காவதாக, தொடையைப் பிடித்துக்கொண்டு நிற்பார். இறுதியாக, தாண்டுவதற்கு சிரமமாக, கைகளைக் கட்டிக்கொண்டு அல்லது கும்பிட்டுக்கொண்டு குனிந்து நிற்பார்.

குனிந்துகொண்டு நிற்பவரை, அவர் முதுகில் கையை ஊன்றித் தாண்டவேண்டும். ஏதேனும் ஒரு கட்டத்தில், யாராவது ஒருவர் அவுட்டாகி விடுவார். அவர், முன்னவர் போலவே ஏதேனும் ஒரு பொருளின் பெயரை ரகசியமாகச் சொல்லிவிட்டு, குனிந்துகொள்ள வேண்டும். மற்றவர்கள் அவரைத் தாண்ட வேண்டும். இப்படியாகத் தொடர்ந்து, ஒருவர் மாற்றி ஒருவர் விளையாடலாம்.

Comments

Popular posts from this blog

‘குலை குலையாய் முந்திரிக்காய்’

காக்கா குஞ்சு

டிக் டிக் யாரது....