சுத்துது சுத்துது ராட்டினம்
பெண் குழந்தைகள் பெரிதும் விரும்பி விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று, ரங்கராட்டினம். இதற்கு ‘கரகர வண்டி’, ‘திம்பி’ ஆகிய பெயர்களும் உண்டு.
எப்படி விளையாடுவது?
இதை, இரண்டு இரண்டு பேராக விளையாடலாம். எக்ஸ் வடிவத்தில் இருவரும் கைகளை கோத்துக் கொள்ள வேண்டும். விரல்களால், ஒருவர் கையை ஒருவர் கொக்கிபோல் பின்னிக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில், இருவரின் கால் பாதங்களும் ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொண்டு இருக்கும். பிறகு, நம் முதுகை பின்பக்கமாக சாய்த்து, கைகளை விறைப்புடன் பிடித்துகொண்டு, ஒருவரை ஒருவர் இழுத்தபடி வட்ட வடிவத்தில் சுற்றுவார்கள்.
ஆரம்பத்தில், மெதுவாக சுற்றத் தொடங்கி, நேரம் போகப்போக, சுற்றலின் வேகம் கூடும். அதிகம் சுற்றினால் தலைசுற்றல் வரும் என்பதால், கொஞ்சம் கொஞ்சமாக ஓய்வெடுத்து விளையாடவும்.
பாடலை பாடியபடியே விளையாடினால், இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்
கரகர வண்டி↔– மு.கோபி
காமாட்சி வண்டி
கிழக்கே போகுது
பொள்ளாச்சி வண்டி
இதுதான் எங்க ராட்டினம்
போகுது பாரு பட்டணம்…
குட்டி பாப்பா ஏறிக்கோ…
சுத்துது சுத்துது ராட்டினம்…
பார்த்து வரலாம் பட்டணம்
Comments
Post a Comment