Posts

‘குலை குலையாய் முந்திரிக்காய்’

தமிழகத்தில் விளையாடப்படும், ‘குலை குலையாய் முந்திரிக்காய்’ விளையாட்டு, பல்வேறு நாடுகளில் வேறு பெயர்களில் விளையாடப்படுகின்றன. மேலை நாடுகளில், இவ்விளையாட்டை, ‘டிராப் த ஹேண்ட்கர்ச்சீஃப்’ (Drop the Handkerchief) என்பார்கள். குறைந்தது ஐந்து முதல், எத்தனை பேர் வேண்டுமானாலும் இவ்விளையாட்டை விளையாடலாம். எட்டுப் பேருக்கு அதிகமாக இருந்தால், விளையாட்டு சுவாரஸ்யமாக இருக்கும். ஆட்டக்காரர்களில் ஒருவரைத் தவிர, மற்றவர்கள் வட்டமாகச் சுற்றி அமர்ந்துகொள்ள வேண்டும். பழம் தேர்வு முறை (எ.கா., சாட், பூட், த்ரீ)  மூலம் சுற்றப்போகும் நபரைத் தேர்வு செய்து கொள்ளலாம். இப்போது, பழமானவர் கையில், கைக்குட்டை அல்லது சிறு துணியை வைத்துக்கொண்டு, வட்டத்தைச் சுற்றி வர வேண்டும். சுற்றும்போது, பாட்டுப்பாடிக்கொண்டே சுற்ற வேண்டும். ‘குலை குலையாய் முந்திரிக்காய்’ என்று சுற்றுபவர் முதலில் பாட்டைத் தொடங்க வேண்டும்.  ‘நரியே நரியே சுத்திவா’ என்று கீழே அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் கைத்தட்டியபடி பாட வேண்டும்.  ‘கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான்’ (சுற்றுபவர்) கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி (அமர்ந்திருப்பவர்கள்) இப்...

கியா கியா குருவி நான்....

பாவனையை அடிப்படையாக கொண்ட இவ்விளையாட்டு குழுவாக ஆடப்படுகிறது. குறைந்தது 5 பேர் தேவை. இதில் ஒருவர் குருவியாகவும், மற்றவர்கள் தென்னை மரம், வாழை மரம், வேப்ப மரம் மற்றும் ஆல மரம் போன்று என்று நடிக்க வேண்டும்.  முதலில் சந்தோஷமாக வாழ்ந்த குருவி ஒன்றுக்கு, துன்ப நேரமாக அதன் இறக்கை ஒடிந்துவிடுகிறது. இப்போது, இறக்கை ஒடிந்த குருவி, ஒவ்வொரு மரமாக சென்று தஞ்சம் கேட்க வேண்டும். முதலில் வேப்ப மரத்திடம் சென்று, கியா கியா குருவி நான் கியா கியா குருவி நான் முள்ளில் ஒரு குருவி வசித்து வந்தது அதன் இறக்கை ஒடிந்து விட்டது வேப்ப மரமே! வேப்ப மரமே... சிறகிழந்த பறவைக்கு இடம் தருவாயா? என்று பாட வேண்டும். அப்போது, வேப்ப மரம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி, மறுத்துவிட வேண்டும். பிறகு தென்னை மரத்திடம் போய், அதே பாட்டை பாட வேண்டும். ‘தென்னை மரமே, தென்னை மரமே, சிறகிழந்த பறவைக்கு இடம் தருவாயா?’ என்று கேட்கும்போது, தென்னை மரமும் சாக்குபோக்கு சொல்லி மறுத்துவிட வேண்டும். அடுத்து வாழை மரத்திடம் கேட்க வேண்டும். அதுவும் மறுத்துவிட்ட பின்னர், கடைசியாக ஆலமரத்திடம் செல்ல வேண்டும். ஆலமரமோ, குருவியிடம் ஆறுதலான வார்த்தைகள...

கொக்கு பறக்கும்; ஆட்டோ பறக்குமா?

விளையாடத் தேவையான நபர்களின் எண்ணிக்கை குறைந்தது நான்கிலிருந்து எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, விளையாட்டின் சுவாரஸ்யம் கூடும். விளையாடத் தேவையான இடம், பொருள் வீட்டுக்குள் உட்கார்ந்தும் விளையாடலாம்.  பொருள் எதுவும் தேவையில்லை. விளையாடும் முறை விளையாட்டுக் குழுவில் யாரேனும் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். தலைவர் உட்பட எல்லோரும் வட்டமாக உட்கார்ந்துகொள்ள வேண்டும். அனைவரும் உள்ளங்கைகளை தரையோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும். தலைவர் முதலில், காக்கா பற பற என்பார். உடனே மற்றவர்கள், பறவை பறப்பது போல்  கைவிரல்களை மேலும் கீழுமாக அசைக்க வேண்டும். இப்படியாக, கொக்கு பறபற, கோழி பறபற, மைனா பறபற என்று ஒவ்வொன்றாகச் சொல்லும்போது, குழுவில் உள்ள மற்றவர்களும் கைகளை பறப்பது போல் அசைக்க வேண்டும். திடீரென, தட்டு பறபற, ஆட்டோ பறபற, நாய் பறபற என்று ஏதேனும் பறக்காத பொருளைக் குறிப்பிட்டு, பறபற என்று தலைவர் சொல்வார். அப்படி பறக்காத பொருளைக் குறிப்பிட்டால், குழுவினர் யாரும் எந்த அசைவையும் மேற்கொள்ளக் கூடாது. கைகளை தரையோடு தரையாகத்தான்...

பச்சை குதிரை தாண்டலாம் வாங்க...

Image
குனிந்து நிற்கப்போகிறவர், ஒரு பூவின் பெயரையோ, உணவுப் பொருளின் பெயரையோ (உதாரணத்திற்கு ரோஜா, தோசை) யாரிடமாவது சொல்லி வைத்துவிட வேண்டும். இது பிறருக்குத் தெரியாது. ஒரு பூவின் பெயர் சொல்லப்பட்டுள்ளது என்று மட்டும் பிறருக்கு துப்புக் கொடுத்துவிட வேண்டும். இப்போது, அவரை குனியவைத்து, மற்றவர்கள் அவரது முதுகில் கையை வைத்துத் தாண்ட வேண்டும். தாண்டுபவர், ஏதேனும் பூவின் பெயரைச் சொல்வார். அவர் சொல்வது, குனிந்தவர் ரகசியமாக சொன்ன பூவின் பெயராக இருந்தால், தாண்டியவர் அவுட் ஆகிவிடுவார். இப்போது அவர் குனிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், அடுத்தவர் தாண்டுவார். இப்படியே விளையாட்டை நீட்டிச் செல்ல வேண்டும். ஆரம்பத்தில், தாழ்வான நிலையில் குனிந்திருப்பதால், தாண்ட இலகுவாக இருக்கும். ஆனால், அடுத்தடுத்த ரவுண்டுகளில், குனிந்திருப்பவர் மெல்ல மெல்ல உயரத்தை கூட்டிக்கொண்டே வருவார். அதைச் சமாளித்து, சரியாகத் தாண்ட வேண்டும். இல்லாவிட்டால், அவர் அவுட்டாகி விடுவார். அதாவது, குனிந்திருப்பவர் முதல் ரவுண்டில், கால்-கட்டைவிரலைப் பிடித்துக்கொண்டு நிற்பார். அடுத்து, கணுக்காலைப் பிடித்துக்கொண்டு நிற்பதால், இன்னும் ...

எலி என்ன செய்யுது?

Image
இயற்கையில் எலியும், பூனையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது. அதையே விளையாட்டாக விளையாடினால்? அசல், டாம் அண்ட் ஜெர்ரிதான். விளையாடுவோமா... பத்திலிருந்து பதினைந்து பேர், இவ்விளையாட்டுக்கு தேவை. இருவரைத் தவிர, மற்றவர்கள் வட்டமாக கைகோர்த்து நின்று கொள்ள வேண்டும் (படத்தை பார்க்க). இப்போது எஞ்சியிருக்கும் இருவரில், ஒருவர் எலி, மற்றொருவர் பூனை. எலியாக நடிப்பவர் வட்டத்திற்கு உள்ளேயும் பூனையாக நடிப்பவர் வட்டத்திற்கு வெளியேயும் நின்று கொள்ள வேண்டும். இப்பொழுது பூனை, "என்ன செய்யுது எலி?" என்ற கேள்வியோடு பாடலைத் தொடங்க வேண்டும். அதற்கு வட்டமாக நிற்பவர்கள் "எலி தூங்குது"என்று பதில் பாட்டு பாட வேண்டும். எலியும் தூங்குவது போல் நடிக்க வேண்டும். மீண்டும் "எலி என்ன செய்யுது?" என்று பூனை வட்டத்தை சுற்றி சுற்றி வரும். அப்போது, எலியின் நடிப்புக்கு ஏற்ப "தூங்கி எழுந்திருக்கிறது, பல் தேய்க்கிறது, சாப்பிடுகிறது, சட்டை போடுகிறது" என்று வட்டமாக நிற்போர் பதில் கூறுவார்கள். கடைசியாக, "எலி வெளியே வரப் பார்க்கிறது" என்று அவர்கள் கூறுவார்கள். அப்போது, எலியைப்...

என்ன பூ வேண்டும் நந்தவனத்தில்?

Image
விளையாட்டை விளையாட, சமபலமுள்ள இருகுழுக்களாக சிறுமியர்கள் பிரிந்துகொள்ள வேண்டும்.  உதாரணத்திற்கு, இருகுழுக்களிலும் தலா 4 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இந்த இரு அணியில், ஒன்று பூப்பறிக்கும் குழு, மற்றொன்று பூக்குழு. பூக்குழு, தங்கள் அணியினர் ஒவ்வொருவருக்கும் பூவின் பெயரை சூட்டிக்கொள்ள வேண்டும். இது பூப்பறிக்கும் குழுவுக்கு தெரியக்கூடாது. இப்போது பூப்பறிக்கும் குழு, பின்வரும் பாடலை பாடி முன்னோக்கி வர வேண்டும். ‘பூப்பறிக்க வருகிறோம்  பூப்பறிக்க வருகிறோம் - நந்தவனத்தில்’  என்று பாட வேண்டும். அப்போது, எதிர்குழுவினர் பின்னோக்கி போக வேண்டும். அதன்பின்னர், “என்ன பூ வேண்டும்  என்ன பூ வேண்டும் - நந்தவனத்தில் ” என்று பதில் பாட்டு பாடிக்கொண்டே இவர்கள் முன்னோக்கி போக வேண்டும். பூப்பறிக்கும் குழு பின்னேறி செல்லும்.  இந்த நிலையில், ஏதாவது பூவின் பெயரை,  பூப்பறிக்கும் குழு சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு, ‘மல்லிகை பூ வேண்டும்   மல்லிகை வேண்டும்’  என்று  பூப்பறிக்கும் குழு சொல்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது, மல்லிகை பூ ...

கல்லா, மண்ணா

Image
கல்லா, மண்ணா விளையாட்டை, குறைந்தது ஐந்திலிருந்து எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.  வழக்கமாக சாட் பூட் த்ரீ போட்டுத்தான், யாரேனும் ஒருவரை பழமாக தேர்வு செய்வோம். அதை விட ஒரு ஜாலியான ஒரு முறை உள்ளது. பின்வரும் பாடலை மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டால், விளையாட்டில் இன்னும் சுவை கூடும். பச்ச பாவக்கா… பளபளங்க… பழனி பச்ச… மினுமினுங்க… செங்கருட்டி… செவத்தபுள்ள… கின்னாவந்தா… கினுகட்டி… உடும்பு… துடுப்பு… மகா… சுகா… பால்.... பறங்கி.... எட்டுமன்... குட்டுமல் ... ஜல் இதில், ஜல் என்ற வார்த்தை யார் மேல் முடிகிறதோ, அவர்தான் பழம். இப்போது, உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவில் விளையாடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்குள்ள மண் தரையை, ‘மண்’ என்றும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை கல் என்றும் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது நம்மைத் துரத்திப் பிடிப்பவரிடம், மற்றவர்கள், ‘உனக்கு கல் வேண்டுமா, மண் வேண்டுமா? என்று கேட்க வேண்டும். ‘எனக்கு மண் வேண்டும்’ என்று அந்தச் சிறுவன் கூறிவிட்டால், மற்றவர்கள் மண்ணில் நிற்கக் கூடாது. அவர்கள், கல்லில் அதாவது நடைபாதையில் ஏறி நின்று கொள்ள...