Posts

Showing posts from April, 2017

பச்சை குதிரை தாண்டலாம் வாங்க...

Image
குனிந்து நிற்கப்போகிறவர், ஒரு பூவின் பெயரையோ, உணவுப் பொருளின் பெயரையோ (உதாரணத்திற்கு ரோஜா, தோசை) யாரிடமாவது சொல்லி வைத்துவிட வேண்டும். இது பிறருக்குத் தெரியாது. ஒரு பூவின் பெயர் சொல்லப்பட்டுள்ளது என்று மட்டும் பிறருக்கு துப்புக் கொடுத்துவிட வேண்டும். இப்போது, அவரை குனியவைத்து, மற்றவர்கள் அவரது முதுகில் கையை வைத்துத் தாண்ட வேண்டும். தாண்டுபவர், ஏதேனும் பூவின் பெயரைச் சொல்வார். அவர் சொல்வது, குனிந்தவர் ரகசியமாக சொன்ன பூவின் பெயராக இருந்தால், தாண்டியவர் அவுட் ஆகிவிடுவார். இப்போது அவர் குனிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், அடுத்தவர் தாண்டுவார். இப்படியே விளையாட்டை நீட்டிச் செல்ல வேண்டும். ஆரம்பத்தில், தாழ்வான நிலையில் குனிந்திருப்பதால், தாண்ட இலகுவாக இருக்கும். ஆனால், அடுத்தடுத்த ரவுண்டுகளில், குனிந்திருப்பவர் மெல்ல மெல்ல உயரத்தை கூட்டிக்கொண்டே வருவார். அதைச் சமாளித்து, சரியாகத் தாண்ட வேண்டும். இல்லாவிட்டால், அவர் அவுட்டாகி விடுவார். அதாவது, குனிந்திருப்பவர் முதல் ரவுண்டில், கால்-கட்டைவிரலைப் பிடித்துக்கொண்டு நிற்பார். அடுத்து, கணுக்காலைப் பிடித்துக்கொண்டு நிற்பதால், இன்னும் ...

எலி என்ன செய்யுது?

Image
இயற்கையில் எலியும், பூனையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது. அதையே விளையாட்டாக விளையாடினால்? அசல், டாம் அண்ட் ஜெர்ரிதான். விளையாடுவோமா... பத்திலிருந்து பதினைந்து பேர், இவ்விளையாட்டுக்கு தேவை. இருவரைத் தவிர, மற்றவர்கள் வட்டமாக கைகோர்த்து நின்று கொள்ள வேண்டும் (படத்தை பார்க்க). இப்போது எஞ்சியிருக்கும் இருவரில், ஒருவர் எலி, மற்றொருவர் பூனை. எலியாக நடிப்பவர் வட்டத்திற்கு உள்ளேயும் பூனையாக நடிப்பவர் வட்டத்திற்கு வெளியேயும் நின்று கொள்ள வேண்டும். இப்பொழுது பூனை, "என்ன செய்யுது எலி?" என்ற கேள்வியோடு பாடலைத் தொடங்க வேண்டும். அதற்கு வட்டமாக நிற்பவர்கள் "எலி தூங்குது"என்று பதில் பாட்டு பாட வேண்டும். எலியும் தூங்குவது போல் நடிக்க வேண்டும். மீண்டும் "எலி என்ன செய்யுது?" என்று பூனை வட்டத்தை சுற்றி சுற்றி வரும். அப்போது, எலியின் நடிப்புக்கு ஏற்ப "தூங்கி எழுந்திருக்கிறது, பல் தேய்க்கிறது, சாப்பிடுகிறது, சட்டை போடுகிறது" என்று வட்டமாக நிற்போர் பதில் கூறுவார்கள். கடைசியாக, "எலி வெளியே வரப் பார்க்கிறது" என்று அவர்கள் கூறுவார்கள். அப்போது, எலியைப்...

என்ன பூ வேண்டும் நந்தவனத்தில்?

Image
விளையாட்டை விளையாட, சமபலமுள்ள இருகுழுக்களாக சிறுமியர்கள் பிரிந்துகொள்ள வேண்டும்.  உதாரணத்திற்கு, இருகுழுக்களிலும் தலா 4 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இந்த இரு அணியில், ஒன்று பூப்பறிக்கும் குழு, மற்றொன்று பூக்குழு. பூக்குழு, தங்கள் அணியினர் ஒவ்வொருவருக்கும் பூவின் பெயரை சூட்டிக்கொள்ள வேண்டும். இது பூப்பறிக்கும் குழுவுக்கு தெரியக்கூடாது. இப்போது பூப்பறிக்கும் குழு, பின்வரும் பாடலை பாடி முன்னோக்கி வர வேண்டும். ‘பூப்பறிக்க வருகிறோம்  பூப்பறிக்க வருகிறோம் - நந்தவனத்தில்’  என்று பாட வேண்டும். அப்போது, எதிர்குழுவினர் பின்னோக்கி போக வேண்டும். அதன்பின்னர், “என்ன பூ வேண்டும்  என்ன பூ வேண்டும் - நந்தவனத்தில் ” என்று பதில் பாட்டு பாடிக்கொண்டே இவர்கள் முன்னோக்கி போக வேண்டும். பூப்பறிக்கும் குழு பின்னேறி செல்லும்.  இந்த நிலையில், ஏதாவது பூவின் பெயரை,  பூப்பறிக்கும் குழு சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு, ‘மல்லிகை பூ வேண்டும்   மல்லிகை வேண்டும்’  என்று  பூப்பறிக்கும் குழு சொல்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது, மல்லிகை பூ ...

கல்லா, மண்ணா

Image
கல்லா, மண்ணா விளையாட்டை, குறைந்தது ஐந்திலிருந்து எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.  வழக்கமாக சாட் பூட் த்ரீ போட்டுத்தான், யாரேனும் ஒருவரை பழமாக தேர்வு செய்வோம். அதை விட ஒரு ஜாலியான ஒரு முறை உள்ளது. பின்வரும் பாடலை மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டால், விளையாட்டில் இன்னும் சுவை கூடும். பச்ச பாவக்கா… பளபளங்க… பழனி பச்ச… மினுமினுங்க… செங்கருட்டி… செவத்தபுள்ள… கின்னாவந்தா… கினுகட்டி… உடும்பு… துடுப்பு… மகா… சுகா… பால்.... பறங்கி.... எட்டுமன்... குட்டுமல் ... ஜல் இதில், ஜல் என்ற வார்த்தை யார் மேல் முடிகிறதோ, அவர்தான் பழம். இப்போது, உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவில் விளையாடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்குள்ள மண் தரையை, ‘மண்’ என்றும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை கல் என்றும் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது நம்மைத் துரத்திப் பிடிப்பவரிடம், மற்றவர்கள், ‘உனக்கு கல் வேண்டுமா, மண் வேண்டுமா? என்று கேட்க வேண்டும். ‘எனக்கு மண் வேண்டும்’ என்று அந்தச் சிறுவன் கூறிவிட்டால், மற்றவர்கள் மண்ணில் நிற்கக் கூடாது. அவர்கள், கல்லில் அதாவது நடைபாதையில் ஏறி நின்று கொள்ள...

டிக் டிக் யாரது....

Image
உற்சாகம் தரும் இவ்விளையாட்டை, நான்கிலிருந்து எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். எப்படி விளையாடுவது?  ஏதேனும் சுவர் ஓரத்தில், ஒரு சிறுவன் நின்று கொள்ள வேண்டும். மற்ற சிறுவர்கள் அவனுடைய கைக்கு எட்டாத தூரத்தில் தள்ளி நின்று கொள்வார்கள். இப்போது, பின்வரும் கேள்வி பதிலை, மாறி மாறி இருதரப்பும் சொல்ல வேண்டும். சிறுவன்         : டிக், டிக் (கதவை தட்டுவது போல் பாவனை செய்ய வேண்டும்) சிறுவர்கள் : யாரது? சிறுவன்         : திருடன் சிறுவர்கள் : என்ன வேண்டும் சிறுவன்         : நகை வேண்டும் சிறுவர்கள் : என்ன நகை? சிறுவன்         : கலர் நகை சிறுவர்கள் : என்ன கலர்? சிறுவன்         : ஏதாவது ஒரு நிறத்தைச் சொல்ல வேண்டும் இப்படி ஒரு நிறத்தைச் சொன்னதும், சிறுவர்கள் தாமதிக்காமல் ஓடிப்போய், அந்த நிறம் எதிலிருக்கிறதோ அதைத் தொட வேண்டும். உதாரணத்திற்கு, பச்சை என்று அந்தச் சிறுவன் சொன்னால், மரம், செடி, ஆடை என்று எங்கு பச்சை நிறம் இருக்கிறதோ, அதை தேடிப்போய் தொட வேண்டும். பச்சை நி...

ராஜா, ராணி, போலீஸ், திருடன்

Image
கொளுத்தும் கோடை வெயிலில் வெளியில் சென்று காயாமல், வீட்டுக்குள் இருந்தே விளையாடும் ஆட்டம் ராஜா, ராணி, மந்திரி, திருடன் போலீஸ் ஆகும். இவ்விளையாட்டுக்கு, நான்கு அல்லது ஐந்து பேர் தேவை. ஒரு காகிதத்தை எடுத்து, சம அளவிலான ஐந்து சீட்டாக கிழித்துக் கொள்ளுங்கள். ஒன்றில் ராஜா, மற்றொன்றில் ராணி, இன்னொன்றில் மந்திரி, அடுத்ததில் போலீஸ், அதற்கடுத்ததில் திருடன் என்று எழுதிக்கொள்ளுங்கள். அதில், ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண் கொடுத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, ராஜாவுக்கு 1000 புள்ளிகள். ராணிக்கு 750, மந்திரிக்கு 500, போலீசுக்கு 250, திருடனுக்கு பூஜ்ஜியம் என்று வைத்துக்கொள்வோம். இப்போது சீட்டுகளை ஒரே மாதிரியாக மடித்துக்கொள்ளுங்கள். அதை குலுக்கி கலைத்துப் போட்டால், அதை எழுதி மடித்தவரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் இருக்க வேண்டும். யாராவது ஒருவர் ஐந்து சீட்டுகளையும் நன்றாக குலுக்கி தரையில் போடவும். ஆளுக்கொரு சீட்டை எடுத்துக்கொள்ளவும். தன்னுடைய சீட்டில் என்ன வந்திருக்கிறது என்பதை அடுத்தவருக்கு தெரியாமல் திறந்து பார்க்கவும். இதில், ராஜா சீட்டு வைத்திருப்பவர், ராணி யார் எனக் கண்டுபிடிக்க வேண்டும். சரி...

ஓடி ஓடி விளையாடு

Image
இந்த விளையாட்டுக்கு, திறந்தவெளி மைதானம் தான் ஏற்ற இடம். இடத்தைப் பொறுத்து, 10 லிருந்து  20 பேர் வரை விளையாடலாம். மற்றவர்களை துரத்திப்பிடித்து அவுட் ஆக்குவதுதான், விளையாட்டின் சாராம்சம். யார் முதலில் துரத்தப்போகிறார் என்று முடிவு செய்துகொண்டு, ‘ஜூட்’ என்று சொன்னதும், மற்றவர்கள் ஓட வேண்டும். திறந்தவெளி இடமாக இருப்பதால், ஓடுபவர்களால் வேகமாக ஓட முடியும். ஓடுபவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடி, துரத்திப் பிடிப்பவருக்கு போக்குக் காட்ட வேண்டும். துரத்திப் பிடிப்பவர் நெருங்கும்போது, ஓடிக்கொண்டிருப்பவர் ‘பாஸ்’ என்று சொல்லிவிட்டு கீழே உட்கார்ந்து கொள்ளலாம். அப்படி உட்கார்ந்தவர் பிடிக்கப்பட்டாலும், அவுட் ஆக மாட்டார். அதேசமயம், உட்கார்ந்தவரால் மறுபடியும் எழுந்து ஓட முடியாது. அவர் மறுபடியும் விளையாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்றால், வேறொரு நபர் வந்து உட்கார்ந்திருப்பவரின் தலையை தொட்டு, ரிலீஸ் செய்ய வேண்டும். அப்படி உதவி செய்வதற்காக யாராவது முன்வரும்போது, துரத்துபவரால் அவரைத் தொட்டு அவுட்டாக்க முடியும். இப்படியாக, பிறரை அவுட்டாக்கும் வரை துரத்துபவர் பிறரைத் துரத்த வேண்டும். அதன் பின்னர் அவுட்டானவ...

சின்னப் பூவே மெல்லக் கிள்ளு!

Image
சில விளையாட்டுகளை எத்தனை முறை விளையாடினாலும் அலுக்காது. அதுபோன்ற ஒன்றுதான், ‘மெல்ல வந்து கிள்ளிப் போ’ விளையாட்டு. ஊகிக்கும் திறனை மேம்படுத்துவதே இந்த விளையாட்டின் சிறப்பம்சம். இரண்டு அணிகள் விளையாடும் இவ்விளையாட்டில், ஒவ்வொரு அணியிலும், 5 லிருந்து 10 நபர்கள் வரை இருக்கலாம். உதாரணத்திற்கு, மொத்தம் 14 பேர் இருக்கிறோம் என்றால், தலா ஏழு, ஏழாக ‘ஏ’ மற்றும்‘பி’ அணி என பிரிந்து கொள்ள வேண்டும். இப்போது,‘ஏ’ அணிக்கு சரவணனும்,‘பி’ அணிக்கு சாய்ராவும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். இப்போது சரவணன், தனது அணியில் உள்ள 6 பேருக்கும், ரகசிய பெயரை சூட்ட வேண்டும். அவை, மலர்கள், பழங்கள், மரங்கள், பிரபலங்கள் என்று எந்த வகைப் பெயர்களாகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு, மலரின் பெயர்களைச் சூட்ட சரவணன் முடிவு செய்தால், ரோஜாப்பூ, மல்லிகை, செம்பருத்தி, அல்லி, தாமரை மற்றும் சூரியகாந்தி என்று ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பெயர் சூட்ட வேண்டும். இதேபோல் சாய்ராவும் தனது அணியினருக்கு ரகசிய பெயர்களைச் சூட்ட வேண்டும். கண்டிப்பாக, யாருக்கு என்ன பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்று எதிரணியினருக்கு தெரியக்கூட...

காக்கா குஞ்சு

Image
இந்த விளையாட்டில் காக்காவாக ஒருவரும், காக்கா விரட்டியாக ஒருவரும் இருக்க வேண்டும். மற்றவர்கள் காக்கா குஞ்சுகள். முதலில் யாரையாவது ஒருவரை காக்காவாக தேர்வு செய்த பிறகு, விளையாட்டை தொடங்கிவிடலாம். விளையாடுவதற்கு ஏதுவாக, குட்டையான, நிறைய கிளைகள் உள்ள மரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். காக்கா குஞ்சுகள், மரக்கிளைகளில் ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டும். காக்கா விரட்டியும், காக்காவும் மரத்துக்கு கீழே நிற்க வேண்டும். அங்கு, ஒரு வட்டத்தைப் போட்டு, அதில் ஒரு குச்சியை வைக்க வேண்டும். 'ஜூட்’ சொன்னதும், காக்கா விரட்டியாக இருக்கும் சிறுவன், குச்சியை எடுத்து, காலுக்கு இடையில் கொண்டு சென்று குச்சியை வேகமாக தூர எறிய வேண்டும். அந்தக் குச்சியை எடுத்து வர, காக்கா சிறுவன் வேகமாக ஓட வேண்டும். அதற்குள் காக்கா விரட்டி சிறுவனும், மரத்தில் ஏறிக்கொள்ள வேண்டும். குச்சியோடு திரும்பி வரும் காக்கா சிறுவன், அதை வட்டத்தில் மீண்டும் வைத்துவிட்டு, வேகமாக மரத்தில் ஏறி, ஏதேனும் காக்கா குஞ்சு சிறுவனை தொட வேண்டும். ஆனால், குஞ்சுகள் அவ்வளவு சீக்கிரம் அகப்பட மாட்டார்கள் அல்லவா?. அவர்கள், மரக்கிளைகளின் மேலே ஏறி இன்னும் ...

சுத்துது சுத்துது ராட்டினம்

Image
பெண் குழந்தைகள் பெரிதும் விரும்பி விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று, ரங்கராட்டினம். இதற்கு ‘கரகர வண்டி’, ‘திம்பி’ ஆகிய பெயர்களும் உண்டு. எப்படி விளையாடுவது? இதை, இரண்டு இரண்டு பேராக விளையாடலாம். எக்ஸ் வடிவத்தில் இருவரும் கைகளை கோத்துக் கொள்ள வேண்டும். விரல்களால், ஒருவர் கையை ஒருவர் கொக்கிபோல் பின்னிக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில், இருவரின் கால் பாதங்களும் ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொண்டு இருக்கும். பிறகு, நம் முதுகை பின்பக்கமாக சாய்த்து, கைகளை விறைப்புடன் பிடித்துகொண்டு, ஒருவரை ஒருவர் இழுத்தபடி வட்ட வடிவத்தில் சுற்றுவார்கள். ஆரம்பத்தில், மெதுவாக சுற்றத் தொடங்கி, நேரம் போகப்போக, சுற்றலின் வேகம் கூடும். அதிகம் சுற்றினால் தலைசுற்றல் வரும் என்பதால், கொஞ்சம் கொஞ்சமாக ஓய்வெடுத்து விளையாடவும். பாடலை பாடியபடியே விளையாடினால், இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் கரகர வண்டி காமாட்சி வண்டி கிழக்கே போகுது பொள்ளாச்சி வண்டி இதுதான் எங்க ராட்டினம் போகுது பாரு பட்டணம்… குட்டி பாப்பா ஏறிக்கோ… சுத்துது சுத்துது ராட்டினம்… பார்த்து வரலாம் பட்டணம் ↔– மு.கோபி

கிச்சு கிச்சு தம்பலம்… கிய்யா கிய்யா தம்பலம்...

Image
 இருவர் ஆடும் இவ்விளையாட்டில், ஒருவர் மற்றவரை எதிர்நோக்கி அமர்ந்துகொள்ள வேண்டும்.   தமக்கிடையே, ஒன்றரை அடி நீளத்துக்கு மணலை நீளவாக்கில் குவித்துவைக்க வேண்டும்.   ஒரு அங்குல சிறிய குச்சி (துரும்பு) ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். விளையாட்டை ஆரம்பிக்கும்போது, கிச்சு கிச்சு தம்பலம்… கிய்யா கிய்யா தம்பலம்.. மச்சு மச்சு தம்பலம் மாயா மாயா தம்பலம் என்று சொல்லிக்கொண்டே, யாராவது ஒருவர் குச்சியை, மணலுக்குள்ளே மறைத்து வைக்க வேண்டும். மறைக்கும்போது, எதிராளிக்கு தெரியாவண்ணம், குச்சியை மண்ணுக்குள் புதைத்து, அதை முன்னும் பின்னும் கொண்டு செல்ல வேண்டும். எதிராளி குழம்பும் வகையில் பாவனை காட்டிவிட்டு, குச்சியை மணலுக்குள் மறைத்து வைத்துவிட வேண்டும். குச்சி இருக்கும் இடத்தைத் தீவிரமாக கவனித்துக் கொண்டிருக்கும் எதிரில் இருப்பவர், குச்சி இங்குதான் இருக்கும் என்று ஏதேனும் ஓர் இடத்தை ஊகம் செய்துகொள்ள வேண்டும். எந்த இடத்தில், அந்தக் குச்சி மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று அவர் கருதுகிறாரோ, அந்த இடத்தின் மேல், தமது இரு கைகளை கோத்து மூட வேண்டும். இப்போது, குச்சியைத் தேடும் நேரம்...

பட்டையை கிளப்பும் பம்பரம்

Image
பம்பரம் சுற்ற தேவையானவை 1. மரக்கட்டையால் செய்யப்பட்ட பம்பரம் 2. பம்பரம் சுழற்றத் தேவையான சாட்டைக் கயிறு பம்பரம் கற்றுக்கொள்ள சிறுவர்களுக்கான எளிய வழி  பம்பரத்தில் கயிற்றைச் சுற்றி, பம்பரத்தைக் கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். பம்பரக் கயிற்றின் ஒருமுனையை, கட்டைவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக்கொள்ள வேண்டும். குனிந்த நிலையில் நின்று, பம்பரம் உள்ள கையை கோழி விரட்டுவது போல், நல்ல வேகமாக முன்பக்கம் கொண்டு சென்று அதே வேகத்தில் கையை பின்பக்கம் கொண்டுவர வேண்டும். பின்பக்கம் கையை இழுக்கும்போது, பம்பரக் கயிற்றை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு, பம்பரக் கட்டையை சுழற்றி விட வேண்டும். பம்பரம் தரையில் பட்டு, கயிற்றின் மூலம் கிடைத்த விசையால் சுற்றும். பம்பரம் விளையாடும் முறை பம்பர விளையாட்டிற்கு, இத்தனை பேர் தான் விளையாட வேண்டும் என்று வரைமுறை எதுவுமில்லை. இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இதில் மூன்று வகையான பம்பரம் விடும் முறை உண்டு: ஒன்று இழுப்பு, இரண்டு சாட்டை, மூன்று குத்து. முதலில் தரையில் ஒரு வட்டம் போட்டுக்கொள்ள வேண்டும். வட்டத்தைச் ச...